உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெட்ரோ கவுன்டர்களிலும் வாட்ஸாப் டிக்கெட் வசதி

மெட்ரோ கவுன்டர்களிலும் வாட்ஸாப் டிக்கெட் வசதி

சென்னை,மெட்ரோ ரயில் நிலைய கவுன்டர்களிலும் 'வாட்ஸாப்' வாயிலாக டிக்கெட் பெறும் வசதி துவக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க, வாட்ஸாப் செயலி, பயண அட்டை, தேசிய பொது இயக்க அட்டை, 'பேடிஎம்' செயலி போன்ற பல்வேறு தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இருப்பினும், 20 சதவீத பயணியர் தினமும் காகித டிக்கெட் பயன்படுத்தி பயணம் செய்கின்றனர். எனவே, காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் நிலைய கவுன்டர்களிலும் வாட்ஸாப் செயலி வாயிலாக டிஜிட்டல் டிக்கெட் பெறும் முறையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குனர் சித்திக் நேற்று கிண்டியில் துவங்கி வைத்தார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி, ஆலோசகர் மனோகரன் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.சித்திக் அளித்த பேட்டி: பயணியர் காகித டிக்கெட் பெறுவதை குறைக்கும் முயற்சியாகவும், டிஜிட்டல் முறைகளை ஊக்குவிப்பதற்காகவும் பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்பட் டு உள்ளன.தற்போது டிக்கெட் கவுன்டர்களிலும் வாட்ஸாப் வாயிலாக, டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தால், காகித பயன்பாடு பெரிய அளவில் குறைக்கப்படும். இந்த வசதி அனைத்து ரயில் நிலையங்களிலும் விரிவுபடுத்தப்படும். பயணியரின் மொபைல்போன் எண்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அமைப்பில் சேமிக்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை