உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கணவன் தாக்கியதில் மனைவி கோமா

கணவன் தாக்கியதில் மனைவி கோமா

புழுதிவாக்கம், மடிப்பாக்கம் அடுத்த புழுதிவாக்கம், ஈகா அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பரதன், 47; ஐ.டி., ஊழியர். இவரது மனைவி சுரேகா, 40. தம்பதிக்கு 12, 7 வயதில் இரு ஆண்குழந்தைகள் உள்ளனர்.அக்., 13, இளைய மகன் 'டிவி ரிமோட்' வைத்து விளையாடி உள்ளான். இதை பரதன் கண்டித்துள்ளார். இதனால், கணவன் -- மனைவி இடையே சண்டை வந்துள்ளது.இதில் ஆத்திரமடைந்த பரதன், மனைவி சுரேகாவின் முடியைப் பிடித்து, 20க்கும் மேற்பட்ட தடவை, தலையை சுவரில் அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில், சுரேகா மயக்கமாகி விழுந்துள்ளார்.ரேடியல் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுரேகாவுக்கு கோமா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சுரேகாவின் தந்தை அளித்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், பரதனை கைது செய்து, கடந்த வாரம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி