மேலும் செய்திகள்
'கமிஷன்' வெட்டு... 'கல்லா' கட்டு!
18-Nov-2025
பாடி: ஸ்கூட்டரில் சென்றபோது நிலைதடுமாறி விழுந்த பெண் மீது, பின்னால் வந்த 'கிரேன்' வாகனம் ஏறி இறங்கியதில், கணவர் கண்முன், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொளத்துார், லட்சுமிபுரம், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன், 39. இவரது மனைவி ராஜபிரியா, 37. இருவரும் உறவினர் வீட்டிற்கு சென்று, நேற்று பிற்பகலில், 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். பாடி மேம்பாலம் அருகே, 200 அடி சாலையில் சென்றபோது, ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்திருந்த ராஜபிரியா, திடீரென நிலைதடுமாறி சாலையில் விழுந்துள்ளார். அப்போது அவருக்கு பின்னால் வந்த, 'கிரேன்' வாகனத்தின் முன்பக்க சக்கரம், ராஜபிரியா மீது ஏறி இறங்கியதில், கணவர் கண்முன்னே, சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், 'கிரேன்' ஓட்டுநரான சுரேஷ், 32, என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்.
18-Nov-2025