உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மனைவி நல வேட்பு விழா

மனைவி நல வேட்பு விழா

காட்டுப்பாக்கம் மன வளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில், 'மனைவி நல வேட்பு' விழா, பூந்தமல்லியில் உள்ள அய்யப்பன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட இளம் ஜோடி முதல் முதிய தம்பதி வரை பங்கேற்றனர். தம்பதியருக்கு முதலில் காப்பு கயிறு, பூக்கள், பழங்கள் வழங்கப்பட்டன. தம்பதியர், காப்பு கயிறு கட்டி, வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். குடும்பத்தை கவனிக்கும் பெண்களை மகிழ்விக்கவே இந்த விழா கொண்டாடப்படுவதாக, மன வளக்கலை நிர்வாகிகள் தெரிவித்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ