உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பணிபுரிந்த கடையில் நகை திருடிய பெண் கைது

பணிபுரிந்த கடையில் நகை திருடிய பெண் கைது

பாண்டிபஜார்:தி.நகர் டாக்டர் நாயர் சாலையிலுள்ள நகைக்கடையில், கடந்த மாதம் 22ம் தேதி, ரேவதி என்ற பெண் பணிக்கு சேர்ந்துள்ளார்.கடந்த 3ம் தேதி முதல், திடீரென பணிக்கு வராததால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர் சுரேஷ் ஜெயின், அப்பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியிலுள்ள நகைகளை தணிக்கை செய்தார்.அதில், 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், வைர நகைகளுக்கு பதில்,'கவரிங்' நகைகள் இருப்பது தெரிந்தது.கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, உண்மையான நகைகளை எடுத்த ரேவதி, கவரிங் நகைகளை வைப்பது பதிவாகி இருந்தது.இதுகுறித்த புகாரை விசாரித்த பாண்டிபஜார் போலீசார், மகாகவி பாரதியார் நகர், சர்மா நகரைச் சேர்ந்த ரேவதி, 33, என்பவரை, நேற்று கைது செய்தனர்.அவரிடமிருந்து 4.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை