உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மொபைல் ஆப்பில் கடன் வாங்கிய பெண் தற்கொலை

மொபைல் ஆப்பில் கடன் வாங்கிய பெண் தற்கொலை

குன்றத்துார், குன்றத்துார் அருகே வரதராஜபுரம் பி.டி.சி., காலனி பகுதியில் வசிப்பவர் நடராஜன். தனியார் ஐ.டி., தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புனிதா, 39. இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை வாங்கியதில், இவர்களுக்கு அதிக கடன் சுமை ஏற்பட்டுள்ளது. கடனை அடைக்க மொபைல் போனில் ஆன்லைன் ஆப் வாயிலாக, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வங்கியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், கடனை திருப்பி செலுத்த முடியாததால், மன உளைச்சலில் இருந்த புனிதா, நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மணிமங்கலம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை