பெண்ணுக்கு தவறான சிகிச்சை மருத்துவமனை மீது புகார்
ராயபுரம், காசிமேடு, புதுமனைக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சரிதா, 42, வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.கடந்த 15ம் தேதி, ராயபுரம் 'சி.எஸ்.ஐ., - ரெயினிங்' தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மறுநாள் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை நடந்துள்ளது. பின், அப்பெண்ணிற்கு இயற்கை உபாதைகள் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஸ்கேன் செய்து பார்த்தபோது, சிறுநீரக பாதைக்கு செல்லும் நரம்பு, தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.இதுகுறித்து கேட்டதற்கு முறையான தகவல் தெரிவிக்காத தனியார் மருத்துவமனை, மேல் சிகிச்சைக்காக, ஆம்புலன்ஸ் வாயிலாக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது.இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.