உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கார் மோதி பெண் பலி

கார் மோதி பெண் பலி

சென்னை: அடையாறில் சாலை யை கடக்க முயன்ற பெண், கார் மோதி உயிரிழந்தார். அடையாறு, லோகநாதன் தோட்டத்தைச் சேர்ந்தவர் புஷ்பா, 60. நேற்று அதிகாலை அடையாறு, எல்.பி., சாலையில் உள்ள தொலைத்தொடர்பு துறை அலுவலகம் எதிரே, சாலையை கடக்க முயன்றார். அப்போது, அடையாறில் இருந்து திருவான்மியூர் நோக்கி சென்ற கார் மோதி, பலத்த காயம் அடைந்தார். அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மருத்துவர்களின் பரிசோதனையில் புஷ்பா இறந்தது தெரிய வந்தது. கார் ஓட்டுநரான ராஜாமுகமது, 45, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி