உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் அடிபட்டு பெண் பலி

ரயிலில் அடிபட்டு பெண் பலி

ஆவடி, பட்டாபிராம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுலோச்சனா 35. கணவர் இறந்த நிலையில், 10 வயது மகளுடன், தந்தை ராஜன், 65, என்பவருடன் வசித்து வந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுலோச்சனா, நேற்று மதியம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு செல்வதற்கு பட்டாபிராம் ரயில் நிலைய தண்டவாளம் வழியாக நடந்து வந்துள்ளார். தண்டவாளத்தை கடக்கும்போது, சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற சரக்கு ரயிலில் அடிபட்டு, பரிதாபமாக உயிரிழந்தார். ஆவடி ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ