உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயில் மோதி பெண் பலி

ரயில் மோதி பெண் பலி

ஆலந்துார், பரங்கிமலை- - பழவந்தாங்கல் ரயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண், கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.இது குறித்து, மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்நிலையில், பழவந்தாங்கல், நேரு காலனியை சேர்ந்த ராஜசேகர் என்பவர், தன் மனைவி கவிதா, 48,வை காணவில்லை என, காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.இதையடுத்து, அவரை போலீசார் அழைத்து, ரயில் விபத்தில் பலியான பெண்ணின் உடலை காட்டிய போது, அது அவரின் மனைவி தான் என்பதை உறுதி செய்தார்.விசாரணையில், சில வருடங்களுக்கு முன் கவிதாவின் தாய் அமிர்தவல்லி இறந்ததால், மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட கவிதா, மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்நிலையில் வீட்டிலிருந்து புறப்பட்ட கவிதா, ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து, ரயில்வே போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ