மேலும் செய்திகள்
வழிப்பறி ரவுடிகள் மூவர் கைது
19-Jan-2025
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, எம்.எஸ்.முத்து நகர் பகுதியில், கன்னிகாபுரத்தை சேர்ந்த ரவுடி ரிஷி,23 என்பவர், குட்கா போதை விற்ற போது, போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். ரிஷியின் தாய் தேவி, 42 என்பவர், புளியந்தோப்பு காவல்நிலையம் சென்று, மகனை விடுவிக்க கோரி, பிளேடால் கழுத்து மற்றும் கைகளில் அறுத்து ரகளை செய்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் முதலுதவி அளித்த போலீசார், அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதில் தேவி நீதிமன்ற ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ரிஷி சிறையில் அடைக்கப்பட்டார்.
19-Jan-2025