உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மகளிர் டி - 20 கிரிக்கெட் இன்று துவக்கம்

 மகளிர் டி - 20 கிரிக்கெட் இன்று துவக்கம்

சென்னை: நான்கு கல்லுாரி அணிகள் பங்கேற்கும் மகளிர் டி - 20 கிரிக்கெட் போட்டி, முகப்பேரில் இன்று துவங்குகிறது. ப்ளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில், ஜி.ஆர்., கோப்பைக்கான மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான டி - 20 கிரிக்கெட் போட்டிகள், இன்று துவங்குகின்றன. போட்டிகள், முகப்பேரில் உள்ள மார் கிரிகோரியஸ் கல்லுாரி வளாகத்தில் நடக்கின்றன. குருநானக், ஜேபாஸ், ராணி மேரி மற்றும் சவீதா பல்கலை ஆகிய நான்கு அணிகள் மட்டுமே பங்கேற்கின்றன. குலுக்கலில் தேர்வாகும் முதல் இரண்டு அணிகள், நேரடியாக அரையிறுதியில் மோத உள்ளன. அடுத்த இரண்டு அணிகள் மற்றொரு அரையிறுதியில் மோதும். இறுதிப் போட்டி 28ல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை