உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விருகம்பாக்கம் கால்வாயில் அவலம் கண்துடைப்புக்கு துார்வாரும் பணி

விருகம்பாக்கம் கால்வாயில் அவலம் கண்துடைப்புக்கு துார்வாரும் பணி

அரும்பாக்கம், அரும்பாக்கம் வழியாக செல்லும் விருகம்பாக்கம் கால்வாயில், துார் வாரும் பணி கண்துடைப்புக்கு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சென்னையில் உள்ள முக்கிய வழித்தடங்களில் விருகம்பாக்கம் கால்வாயாயும் ஒன்று. நெற்குன்றத்தில் துவங்கும் இக்கால்வாய் அரும்பாக்கம், சூளைமேடு, எம்.எம்.டி.ஏ., காலனி வழியாக, 6 கி.மீ., துாரத்தில், அமைந்தகரை அருகே கூவத்தில் கலக்கிறது.முறையாக சீரமைக்கப்படாததால் கால்வாய் முழுதும் குப்பை கழிவுகள் நிறைந்துள்ளன. குறிப்பாக, 106வது வார்டு, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி அருகில், சூளைமேடு, பத்மநாப நகர், தமிழர் வீதியில் செல்லும் கால்வாயில், முட்செடிகள் வளர்ந்துள்ளன. பாரி தெருவிலும் அதேநிலைதான். இது தொடர்பாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, செய்தியில் வெளியான படம் இடம்பெற்றிருந்த பகுதியின் ஒரு புறம் மட்டுமே குப்பையை அகற்றி, துார்வாரும் பணி நடந்தது.மற்றொரு புறம் அப்படியே அரைகுறையாக விட்டுவிட்டனர். இதனால் சீர்கேடு நிலவுகிறது. கண்துடைப்புக்காக துார்வாராமல் முறையாக, பணிகளை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி