போதை ஊசி பயன்படுத்திய தொழிலாளி அட்மிட்
எம்.கே.பி. நகர் :வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் முகேஷ், 19; சுமை துாக்கும் தொழிலாளி.நேற்று முன்தினம் இரவு, வியாசர்பாடி, கூட் செட் பகுதியில், 'டெபண்டோல்' எனும் வலி நிவாரணி மாத்திரையை, போதைக்காக ஊசி வாயிலாக உடலில் செலுத்தி கொண்டுள்ளார்.இதனால் அவரது வலது கையில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார்.