நகை பட்டறையில் தங்கம் திருடிய தொழிலாளி கைது
சென்னை::ராயப்பேட்டை கதீட்ரல் சாலையில், ஜெய்ப்பூர் ஜெம்ஸ் என்ற நகை பட்டறை உள்ளது. இந்த பட்டறையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பாபி ஹஸ்ரா,43 என்பவர், 17 ஆண்டுகளாக தங்க கட்டிகளை உருக்கும் வேலை செய்து வந்தார். இவர், தங்க கட்டி மற்றும் காப்பர் கம்பிகளை திருடி, மே 23ல் தலைமறைவாகிவிட்டதாக, பட்டறை மேலாளர் கவுதம் சுரானா, ராயப்பேட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். தனிப்படை போலீசார் விசாரித்து, மேற்கு வங்கத்தில் பதுங்கி இருந்த பாபி ஹஸ்ராவை நேற்று கைது செய்தனர்.இவரிடம் இருந்து, 107 கிராம் காப்பர் கம்பி, 20 கிராம் சவரன் தங்க கட்டியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.