3வது மாடியில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
வண்ணாரப்பேட்டை: வாரிய குடியிருப்பின் கட்டுமான தளத்தின் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்து, தொழிலாளி உயிரிழந்தார். பழைய வண்ணாரப்பேட்டை, கிழக்கு கல்லறை சாலையில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், புது குடியிருப்புகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கோகுல், 30, என்பவர், நேற்று காலை 9:00 மணிக்கு கட்டடத்தின், 3வது மாடியில் 'சென்ட்ரிங்' பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கால் இடறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவரை, சக பணியாளர்கள் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் கோகுல் இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.