உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  உலக வில்வித்தை எஸ்.ஆர்.எம்., வீரர் அசத்தல்

 உலக வில்வித்தை எஸ்.ஆர்.எம்., வீரர் அசத்தல்

சென்னை: மேற்கு ஐரோப்பாவின் லக்சம்பர்க் நாட்டில் நடந்த உலக வில்வித்தை தொடர் போட்டி யில், இந்தியா சார்பில் போட் டியிட்ட சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை வீரர் திருமுருகணேஷ் மணிரத்னம், வெண்கலப் பதக்கம் வென்றார். உலக வில்வித்தை மற்றும் லக்சம்பர்க் குய்லுாம் டெல் வில்வித்தை கிளப் இணைந்து, '11வது ஜி.டி., ஓபன் உலக வில்வித்தை தொடர்' போட்டியை நடத்தின. லக்சம்பர்க் நாட்டின் ஸ்ட்ராசனில் உள்ள குய்லுாம் டெல் வில்வித்தை கிளப்பில் நடந்துவந்தது. இதில் உலகின் 12 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியிட்டனர். இதன் ஆண்கள் 21 வயதுக்குட்பட்ட 'காம்பவுண்ட்' பிரிவில், இந்தியா சார்பில் போட்டியிட்ட சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை வீரர் திருமுருகணேஷ் மணிரத்னம், 20, தன் சிறப்பான ஆட்டத்தால் மொத்த புள்ளிகள் 588 பெற்று, சர்வதேச பதிப்பில், வெண்கலப் பதக்கம் கைப்பற்றி அசத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ