உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / யமஹா - கேடிஎம் பைக் மோதல் வாலிபர் பலி; சிறுவன் சீரியஸ்

யமஹா - கேடிஎம் பைக் மோதல் வாலிபர் பலி; சிறுவன் சீரியஸ்

திருவொற்றியூர் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஹரிஷ்குமார், 25, திருவொற்றியூரைச் சேர்ந்த மனோஜ், 24, விக்கி, 21, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த, 17 வயது சிறுவன் ஆகிய நால்வரும் நண்பர்கள்.நேற்று முன்தினம் இரவு, எண்ணுாரில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி விட்டு பைக்கில் வீடு திரும்பினர். ஹரிஷ்குமார் மற்றும் 17 வயது சிறுவன், கே.டி.எம்., பைக்கிலும், விக்கி மற்றும் மனோஜ் ஆகிய இருவரும், 'யமஹா' பைக்கிலும், எண்ணுார் விரைவு சாலையில் சென்றுக் கொண்டிருந்தனர்.திருவொற்றியூர், கே.வி.கே., குப்பம் அருகே, ஒரே திசையில் சென்ற இரு பைக்குகளும் திடீரென பக்கவாட்டில் உரசி விபத்துக்குள்ளாகின.இதில், இரு பைக்குகளும், அதில் பயணித்தோரும் துாக்கி வீசப்பட்டனர்.விபத்தில், ஹரிஷ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற மூவரும் பலத்த காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர், காயமடைந்தோரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.தகவலறிந்து வந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ஹரிஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். விபத்தில் காயமடைந்த 17 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை