உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / யப்பா... இப்ப தான் நிம்மதி!

யப்பா... இப்ப தான் நிம்மதி!

வாகனங்கள் அகற்றம்

செங்குன்றம், ஸ்ரீபனையாத்தம்மன் கோவில் அருகே, பாரத் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது.அதன் நுழைவு வாயில் அருகே, சேதமடைந்த தள்ளுவண்டி, பழுதான இரு சக்கர வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.அப்பகுதிகளில் மழைநீர் தேங்கி, 'டெங்கு' கொசுப்புழு உற்பத்திக்கான சூழலும் உருவானது. இது குறித்து, நம் நாளிதழில், நேற்று மேற்கண்ட பிரச்னை குறித்த செய்தி வெளியானது. அதன் பின், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி நிர்வாகம், துாய்மை பணியாளர்கள் வாயிலாக, அங்கிருந்த பழுதடைந்த வாகனங்கள் மற்றும் குப்பை கழிவுகளை அகற்றி, அந்த இடத்தில், பிளீச்சிங் பவுடர் தெளித்து, சுகாதார நடவடிக்கை மேற்கொண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ