வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது
அம்பத்துார்,அம்பத்துார், கள்ளிக்குப்பம், வசந்தம் நகரைச் சேர்ந்தவர் சதாசிவம், 68. இவர், குடும்பத்துடன் ஏப்., 6ம் தேதி திருச்சி சென்று, 12ம் தேதி சென்னை திரும்பியுள்ளார்.அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 3 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தன.இது குறித்து, அம்பத்துார் போலீசார் விசாரித்தனர். இதில், கொளத்துாரைச் சேர்ந்த பழைய குற்றவாளியான மணிகண்டன், 25, என்பவர், திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று முன்தினம் அவரை கைது செய்த போலீசார், 3 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். அதே நாளில் நடந்த மற்ற கொள்ளை சம்பவங்களுக்கும், மணிகண்டனுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணங்களில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.