உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமியை சீண்டிய வாலிபர் கைது

சிறுமியை சீண்டிய வாலிபர் கைது

தண்டையார்பேட்டை:கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவர், நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற நிலையில், அவரது மகள்கள் 16 வயது சிறுமி உட்பட இருவர் வீட்டில் இருந்துள்ளனர்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தியாகராஜன், 30, என்பவர் மதுபோதையில், சிறுமியரை கதவை திறக்க சொல்லி வற்புறுத்தி உள்ளார். சிறுமியர் கதவை திறந்த நிலையில், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமியரின் தாய், தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், நேற்று தியாகராஜனை 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ