மேலும் செய்திகள்
போலீஸ்காரர் துாக்கிட்டு தற்கொலை
23-Feb-2025
ஏழுகிணறு:ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் நரேஷ்குமார், 36. இவர், சவுக்கார்பேட்டையில் மனைவி, மகனுடன் வசித்து வருகிறார்.கடந்த 10 நாட்களாக நரேஷ்குமாரின் மனைவி கடைக்கு செல்லும்போதும், வடமாநில நபர் ஒருவர், பின் தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறி சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்நிலையில், கடந்த 21ம் தேதி இரவு, அதே நபர் நரேஷ்குமாரின் வீட்டு ஜன்னல் வழியாக, அவரது மனைவியை சைகை மூலம் அழைத்து தகாத வார்த்தைகளால் பேசி ரகளை செய்தார்.இது தொடர்பாக தகராறு ஏற்படவே, அக்கம்பக்கத்தினர் வருவதை அறிந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து நரேஷ்குமார் அளித்த புகாரின்படி, ஏழுகிணறு போலீசார், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.இதில், சவுக்கார்பேட்டை, வெங்கடேசன் மேஸ்திரி தெருவைச் சேர்ந்த சுசில்குமார், 29, என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.
23-Feb-2025