உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பைக் திருடிய வாலிபர் கைது

பைக் திருடிய வாலிபர் கைது

ஆவடி, ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சூர்யகுமார், 27; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு, தன் 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தி இருந்தார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது, பைக் திருடு போனது தெரிந்தது.இது குறித்து விசாரித்த ஆவடி போலீசார், பைக் திருட்டில் ஈடுபட்ட ஆவடி, கணபதி கோவில் தெருவைச் சேர்ந்த விஜய், 25, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி