உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணிடம் சீண்டல் வாலிபருக்கு தர்ம அடி

பெண்ணிடம் சீண்டல் வாலிபருக்கு தர்ம அடி

திருவொற்றியூர்:பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற, போதை வாலிபரை பொதுமக்கள் நையப்புடைத்து, போலீசில் ஒப்படைத்தனர்.திருவொற்றியூரைச் சேர்ந்த, 20 வயது இளம்பெண், நேற்று, தேரடி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, போதையில் வந்த, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர், நிலை தடுமாறி அந்த இளம்பெண்ணின் கையைப் பிடித்ததாக தெரிகிறது.இதனால், பயந்து போன அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி, அந்த போதை வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். பின் திருவொற்றியூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார், வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர், திருப்பூரைச் சேர்ந்த வினோத் ஜான், 25, என்பது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி