உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஸ்கூட்டர் திருடிய வாலிபர் சிக்கினார்

ஸ்கூட்டர் திருடிய வாலிபர் சிக்கினார்

எண்ணுார்:அதிகாலையில் ஸ்கூட்டர் திருடி தப்ப முயன்ற வாலிபர், ரோந்து போலீசாரிடம் சிக்கினார். எண்ணுார் போலீசார் நேற்று அதிகாலை, எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகை யில் வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரை தள்ளிக் கொண்டு செல்வதை பார்த்து விசாரித்துள்ளனர். முன்னுக்குபின் முரணாக பதில் அளிக்கவே, வாகனத்தின் ஆவணத்தை போலீசார் கேட்டுள்ளனர். அப்போது, ஸ்கூட்டரை திருடி கொண்டு வருவதை ஒப்புக்கொண்டார். தொடர் விசாரணையில், சுனாமி குடியிருப்பு, ஒத்தவாடை பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன், 22, என்பதும், எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு 154வது பிளாக்கைச் சேர்ந்த அப்பு, 42, என்பவரின் வாகனம் என்பதும் தெரிய வந்தது. ஸ்கூட்டரை பறி முதல் செய்த போலீசார், ஹரிஹரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ