ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை
எழும்பூர்:தாம்பரம் - சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில், நேற்று காலை 7:30 மணியளவில், சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகே சென்றது.அப்போது திடீரென இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். சக்கரத்தில் சிக்கி, இளைஞரின் உடல் இரண்டு துண்டானது. உடனே ஓட்டுனர் ரயிலை நிறுத்தினார். பின் சம்பவம் குறித்து எழும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, ஓட்டுனர் தொடர்ந்து ரயிலை இயக்கிச் சென்றார். ரயில்வே போலீசார் உடலை மீட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.