உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பங்கு சந்தை நஷ்டத்தால் வாலிபர் தற்கொலை

பங்கு சந்தை நஷ்டத்தால் வாலிபர் தற்கொலை

துரைப்பாக்கம், துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாபு, 32. இவர், ராஜிவ்காந்தி சாலை, காமராஜர் சாலை சந்திப்பில், ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, அவர் வீட்டிற்கு செல்லவில்லை.இதையடுத்து, நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் கடை திறக்காததால், சந்தேகம் அடைந்த அவரது தாய், கடை ஷட்டரை துாக்கி பார்த்தபோது, உள்ளே துாக்கிட்டு தற்கொலை செய்திருந்தார்.இது குறித்த புகாரின்படி, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் விசாரணையில், பங்குச் சந்தையில் பாபு முதலீடு செய்து வந்ததும். அதில் பெரும் இழப்பு ஏற்பட்டு கடனாளியானதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை