உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாதவரம் பூட்டிய கிடங்கில் வாலிபர் வெட்டி கொலை

மாதவரம் பூட்டிய கிடங்கில் வாலிபர் வெட்டி கொலை

மாதவரம், பூட்டிய கிடங்கில், ரத்த காயங்களுடன் வாலிபர் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர். மாதவரம், அம்பேத்கர் நகர் அருகே, தனியாருக்கு சொந்தமான இரும்பு நிறுவன கிடங்கு, 10 ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டியே உள்ளது. இந்த கிடங்கில் இருந்து, நேற்று காலை திடீரென அலறல் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் தெரிவித்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு மாதவரம் போலீசார் சென்றனர். அங்கு, மாதவரம், பர்மா காலனி பகுதியைச் சேர்ந்த சந்துரு என்ற லோகேஷ், 24, கத்தி வெட்டு காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த மாதவரம் போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர். போலீசார் கூறுகையில், 'பல ஆண்டுகளாக மூடி கிடந்த கிடங்கை, கஞ்சா, மது அருந்தும் இடமாக சிலர் பயன்படுத்தி வருகின்றனர். அதுபோல் ஒரு கும்பல் கிடங்கில் நுழைந்து, போதை தகராறில் லோகேஷை கொலை செய்திருக்கலாம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி