உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையில் கிடந்த ரூ.1.46 லட்சம் போலீசில் ஒப்படைத்த வாலிபர்

சாலையில் கிடந்த ரூ.1.46 லட்சம் போலீசில் ஒப்படைத்த வாலிபர்

கோடம்பாக்கம்:சாலையோரம் பிளாஸ்டிக் கவரில் கேட்பாரற்று கிடந்த 1.46 லட்சம் ரூபாயை, தனியார் தொலைக்காட்சி ஊழியர் மீட்டு கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். கோடம்பாக்கம், புளியூர்புரத்தைச் சேர்ந்தவர் மைக்கேல், 23; இவர் 'புதிய தலைமுறை' டிவி சேனலில் கணக்காளராக பணிபுரிகிறார்.நேற்று முன்தினம் இரவு, தன் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே கேட்பாரற்று கிடந்த பிளாஸ்டிக் கவரை எடுத்து பார்த்தார். அதில் 1.46 லட்சம் ரூபாய் இருந்தது. அந்த பணத்தை, கோடம்பாக்கம் போலீசாரிடம், மைக்கேல் ஒப்படைத்தார். அவரை, போலீசார் பாராட்டினர். பணத்தை யார் தவறவிட்டது என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை