மேலும் செய்திகள்
போன் பறித்து ஓடியவரை மடக்கி பிடித்த பகுதிவாசிகள்
01-Apr-2025
திருவொற்றியூர், திருவொற்றியூர், காலடிப்பேட்டை, திலகர் நகரைச் சேர்ந்தவர் முருகன், 43. இவர், கோமாதா நகரில் மாட்டுத்தீவன வியாபாரம் செய்து வருகிறார்.அவரிடம் பணிபுரியும் வடமாநில வாலிபர்கள் சிலர், அங்கு தங்கி பணிபுரிகின்றனர். அவர்களின் அறைக்கதவு நேற்று காலை திறந்திருந்தது. அப்போது, வாலிபர் ஒருவர் புகுந்து, தர்மேந்தர் என்ற வடமாநில வாலிபரின் மொபைல் போனை திருடி, தப்பியோட முயன்றார்.தர்மேந்தர் அவரை, பகுதிவாசிகளின் உதவியுடன் துரத்திச் சென்று பிடித்து, திருவொற்றியூர் போலீசாரிடம் ஒப்படைத்தார்.விசாரணையில், பிடிபட்ட வாலிபர் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த டேவிட் சங்கீத், 24, என்பதும், இவர் மீது, ஏழு திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
01-Apr-2025