உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஆனைமலை : ஆனைமலை அடுத்த திவான்சாபுதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில், மாணவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட வேலை செய்யும் மாதிரிகள் மற்றும் விலை குறைவான பொருட்களை பயன்படுத்தி பலவகை மாதிரிகள் செய்யப்பட்டன. மணல் கடிகாரம், மழைநீர் சேகரிப்பு, காற்றாலை, பசுமை இல்ல விளைவு போன்றவை கண்காட்சியில் இடம் பெற்றன. இயங்கும் மாதிரிகளான அரவை இயந்திரம், காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பு, நீரில் மிதக்கும் மெழுகுவர்த்தி போன்றவையும் பார்வைக்கு வைக்கப்பட்டன. பார்வையாளர்களுக்கு மாணவர்களால் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பசுமை இல்லம், அரவை இயந்திரம் ஆகியவற்றுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் ரத்தினம் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் திப்பன், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை