உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானை வழித்தடத்தில் வேகத்தடை; இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

யானை வழித்தடத்தில் வேகத்தடை; இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

வால்பாறை; வால்பாறையில், யானைகள் வழித்தடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக -- கேரள எல்லையில் வால்பாறை அமைந்துள்ளதால், இரு மாநில வனப்பகுதியில் அதிகளவில் யானைகள் இடம் பெயர்கின்றன. இந்நிலையில், வால்பாறையில் பருவமழைக்கு பின், வனவளம் செழிப்பாக இருப்பதால், யானைகள் பல்வேறு எஸ்டேட்களில் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.இங்குள்ள தேயிலை காட்டை ஒட்டியுள்ள துண்டு சோலையில் முகாமிட்டுள்ள யானைகள், உணவு, குடிநீருக்காக அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன. யானைகள் சாலைகளை கடக்கும் பகுதிகளில், மிக வேகமாக செல்லும் வாகனங்களால் யானைகளுக்கும், வாகனத்தில் செல்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:மலைப்பகுதியில் ஆண்டாண்டு காலமாக யானைகள் நடந்து சென்ற பாதை அழிக்கப்பட்டு, அங்கு தேயிலை பயிரிடப்பட்டுள்ளன. மேலும், யானை வழித்தடங்களில் தனியார் எஸ்டேட் நிர்வாகங்கள், விதிமுறையை மீறி அனுமதி பெறாமல் சொகுசு விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.இதனால், யானைகள் வழி மாறி எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன. வனவிலங்கு - மனித மோதலும் அதிகரித்துள்ளதோடு, உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே பாதுகாப்பு கருதி, யானைகள் நடமாடும் பகுதியில் உள்ள ரோடுகளில் வனத்துறை சார்பில் வேகத்தடை அமைக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ