விசர்ஜன ஊர்வலம் இணைப்பு
சூலுார் சுல்தான்பேட்டை, கருமத்தம்பட்டி பகுதிகளில், இந்து முன்னணி, தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி, வீர இந்து சேனா உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், 200 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் நேற்று முன் தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்துக்களின் ஒற்றுமை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இன்று மாலை, பொதுக்கூட்டங்கள் மற்றும் விசர்ஜன ஊர்வலம் நடக்க உள்ளது.இந்து முன்னணி சார்பில் சூலூர் பெருமாள் கோவில் திடலில், 4:00 மணிக்கு, பொதுக்கூட்டம், சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்க தலைவர் சம்பத்குமார் தலைமையில் நடக்கிறது. மாநில செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன் எழுச்சி உரையாற்ற உள்ளார். மாவட்ட செயலாளர் ராஜ்குமார், பசும்பொன் தேசிய கழக மாவட்ட செயலாளர் முருகேஷ், பா.ஜ., தலைவர்கள் பழனிசாமி, ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், அண்ணா கலையரங்கில், 3:00 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆசியுரை வழங்குகிறார். தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்.ஆர். கோபால்ஜி எழுச்சி உரையாற்றுகிறார். மாநில இணை பொதுச்செயலாளர் வக்கீல் விஜயகுமார், உதயகுமார், கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.