உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வால்பாறையில் 7 மையங்களில் 10ம் வகுப்பு செய்முறை தேர்வு

வால்பாறையில் 7 மையங்களில் 10ம் வகுப்பு செய்முறை தேர்வு

வால்பாறை; பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட வால்பாறையில், 10ம் வகுப்பு செய்முறைத்தேர்வு இன்று (22ம் தேதி) துவங்கி, 28ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக, வால்பாறை, சின்கோனா, அட்டகட்டி, சோலையாறுடேம் உள்ளிட்ட, ஏழு பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வால்பாறை தாலுகாவில் மொத்தம், 430 மாணவர்கள் செய்முறை தேர்வை எதிர்கொள்ளவுள்ளனர்.ஆசிரியர்கள் கூறுகையில், 'மாணவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில், காலை மற்றும் மதியம் என இரு பிரிவுகளாக செய்முறை தேர்வுகள் நடத்தப்படும். செய்முறை தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகள் வாயிலாக உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.செய்முறை தேர்வுக்கு பின், பொதுத்தேர்வு அச்சமின்றி எதிர்கொள்ள மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை