125 கிலோ குட்கா பறிமுதல்இருவர் கைது
கோவை;மேட்டுப்பாளையம் சாலையில் சட்டவிரோதமாக குட்கா பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சாய்பாபா காலனி போலீசார் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., மார்க்கெட் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது அப்பகுதியில் இருந்த வீரபாண்டியை சேர்ந்த ஜெயகுமார், 43 மற்றும் டவுன்ஹால் பகுதியை சேர்ந்த ஜவகர், 24 ஆகியோரிடம் விசாரித்ததில் அவர்கள் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து சுமார் 125 கிலோ குட்கா மற்றும் மினி டெம்போ ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.