உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 16 சவரன் நகை திருட்டு; நாட்டு வைத்தியர் கைது

16 சவரன் நகை திருட்டு; நாட்டு வைத்தியர் கைது

போத்தனூர்; கோவை, குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர், பாலு அவென்யூவை சேர்ந்தவர் லூயிஸ் குழந்தைராஜ். உடல்நிலை சரியில்லாத மனைவிக்கு தென்காசி மாவட்டம், கழனியார்குளத்தை சேர்ந்த நாட்டு வைத்தியர் முருகன், 45 என்பவரை வரவழைத்து, சிகிச்சை அளித்து வந்தார். இதற்காக அழகு சாந்தி என்பவரை, மனைவிக்கு உதவி செய்ய நியமித்தார்.இந்நிலையில் கடந்த, 21ல் பீரோவிலிருந்த 16 சவரன் தங்க நகைகள், ரூ.3 ஆயிரம் காணாமல் போயிருந்தது. லூயிஸ் குழந்தைராஜ் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் கஸ்தூரி, அழகுசாந்தியை வரவழைத்து விசாரித்தார். நாட்டு வைத்தியர் முருகன் கைவரிசை காட்டிச் சென்றது தெரிந்தது. முருகனை கைது செய்த போலீசார், நகைகளை மீட்டனர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ