250 விநாயகர் சிலைகள் சாடிவயலில் விசர்ஜனம்
தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த, 250க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், சாடிவயல், சின்னாற்றில் கரைக்கப்பட்டன.தொண்டாமுத்தூர் வட்டார பகுதியில், விநாயகர் சதுர்த்தியன்று, பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில், 180 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று முன் தினம் இரவு, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள நாகராஜபுரம் நரசாம்பதி குளம், பேரூர் பெரியகுளம், சாடிவயல், சின்னாறு, நொய்யலின் கிளை வாய்க்கால்கள் என பல்வேறு இடங்களில், மேள தாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட, விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. நரசாம்பதி குளத்தில், கோவை நகர் பகுதி மற்றும் வடவள்ளி, வேடப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட, 40க்கு மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. தொண்டாமுத்தூர் கீழ் சித்திரைச்சாவடி வாய்க்காலில், 8 சிலைகளும், பேரூர் பெரிய குளத்தில், 30 சிலைகளும், சாடிவயல் சின்னாற்றில், 250க்கும் மேற்பட்ட சிலைகளும், விசர்ஜனம் செய்யப்பட்டன. 300க்கு மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.