உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதை மாத்திரைகளுடன் 4 பேர் கைது; ஒருவர் ஓட்டம்

போதை மாத்திரைகளுடன் 4 பேர் கைது; ஒருவர் ஓட்டம்

போத்தனூர்:போதை பயன்பாடு மாத்திரைகள் மற்றும் கஞ்சாவுடன், நான்கு பேர் போலீசாரிடம் சிக்கினர். குனியமுத்தூர் போலீஸ் எஸ்.எஸ்.ஐ., மணிசேகரன், நேற்று முன்தினம் குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் குறிச்சி குளக்கரையில் ரோந்து சென்றார். சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த கும்பலை விசாரித்தார். அவர்கள், சுந்தராபுரம் அருகே செங்கோட்டையா காலனியை சேர்ந்த கேசவன், 25, குனியமுத்தூர், அன்னம நாயக்கர் வீதியை சேர்ந்த ராபித், 20, ஜீவா நகரை சேர்ந்த அப்துல் ரஹீம்,27, இடையர்பாளையம், கறிவேப்பிலை தோட்டத்தை சேர்ந்த சனூப், 27 மற்றும் அழகாச்சி தோட்டத்தை சேர்ந்த மனோஜ்குமார் என தெரிந்தது. இவர்கள் விற்பனைக்காக 1.1 கி.கிராம் கஞ்சா, போதை பயன்பாட்டுக்கான டே பெண்டால், டயஸபாம் மாத்திரைகள் 133 வைத்திருப்பதும் தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அனைவரையும் கைது செய்ய முற்பட்டனர். மனோஜ்குமார் தப்பியோடினார். கைது செய்யப்பட்ட நால்வரும் சிறையிலடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி