| ADDED : ஜூலை 09, 2024 11:21 PM
கோவை;டிபன் கடை உரிமையாளரின் கழுத்தில் கத்தியை வைத்து ரூ.5,000 கொள்ளையடித்து தப்பிய இருவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.பி.என்.புதுார், கோபால் நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன்,51; டிபன் கடை நடத்திவருகிறார். நேற்று முன்தினம் இவர் தடாகம் ரோடு, 'டாஸ்மாக்' மதுக்கடை அருகே பேக்கரியில் டீ குடித்துக்கொண்டிருந்தார். அங்கு வந்த தடாகம் ரோடு, ராயப்பபுரத்தை சேர்ந்த தீபஸ்வரூப்,34, கே.கே., புதுார், அண்ணா நகரை சேர்ந்த ஜான் பாசா,37, ஆகியோர் விஸ்வநாதனிடம் பணம் கேட்டுள்ளனர்.அதற்கு, பணம் இல்லை என தெரிவித்ததற்கு இருவரும் தகாதவார்த்தைகள் பேசியுள்ளனர். மேலும், ஜான் பாசா, விஸ்நாதனின் கைகளை பிடித்துக்கொள்ள, தீபஸ்வரூப் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பாக்கெட்டில் இருந்த ரூ.5,000ஐ கொள்ளையடித்து, டூ வீலரில் தப்பினர். ஆர்.எஸ்.புரம் போலீசாரிடம் விஸ்வநாதன் அளித்த புகாரின்படி, இருவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.