மேலும் செய்திகள்
பீரகுப்பத்தில் வரும் 26ல் மக்கள் தொடர்பு முகாம்
21-Feb-2025
அன்னுார்; எல்லப்பாளையத்தில் நடந்த முகாமில், 56 மனுக்கள் பெறப்பட்டன. வருகிற 26ம் தேதி கரியாம்பாளையம், செல்வநாயகி அம்மன் கோவில் மண்டபத்தில் கோவை கலெக்டர் பவன்குமார் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.இந்த முகாமை முன்னிட்டு, கரியாம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் முகாம் நேற்று எல்லப்பாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடந்தது.இதில் கோவை வடக்கு ஆர்.டி.ஓ.,கோவிந்தன் தலைமை வகித்தார். அன்னுார் தாசில்தார் யமுனா முன்னிலை வகித்தார்.முகாமில் வீட்டுமனை பட்டா கோரி 10, மகளிர் உரிமைத் தொகை கோரி 8, பட்டா மாறுதல் கோரி 12 உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக கரியாம்பாளையம், சுக்ரமணி கவுண்டர் புதுார், எல்லப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 56 மனுக்கள் அளித்தனர்.மனுக்கள் குறித்து கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி ஆர்.டி.ஓ., அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.முதியவர் ஒருவர் பட்டா மாறுதலுக்காக பல மாதங்களாக அலைவதாக புகார் தெரிவித்தார். இதையடுத்து ஆர்.டி.ஓ., உடனே அவருக்கு பட்டா மாறுதல் உத்தரவு வழங்க தாசில்தாருக்கு அறிவுறுத்தினார். முகாமில், துணை தாசில்தார் தெய்வ பாண்டியம்மாள், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர். பொதுமக்கள் கூறுகையில், 'முகாம் குறித்த தகவல் முந்தைய நாள் தான் தெரிந்தது. இதனால் உரிய ஆவணங்களை தயார் செய்து, ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியவில்லை. முகாம் குறித்து சில நாட்களுக்கு முன்னதாகவே அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருக்கலாம்,' என்றனர்.
21-Feb-2025