உழவர் சந்தையை சீரமைக்க 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் விரைவில் துவங்கவுள்ளன.இங்கு, 170 கடைகள் உள்ளன. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்கும் வகையில், தண்ணீர் செல்லும் கட்டமைப்பு, புதிய கூரைகள் வேய்தல், மேற்கூரையை 4 அடி முன் இழுத்து, பொதுமக்களும் நிழலில் நின்று பொருட்களை வாங்கும் வகையில் மாற்றுதல், பார்க்கிங் வசதி மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளன. இதற்காக, 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ஷாம் ரவேல் தெரிவித்தார்.