மேலும் செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு
06-Sep-2024
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் பிற அமைப்புகள் சார்பில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி அன்று இச்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மேலும் இன்று சிலைகள் ஊர்வலமாக சென்று கரைக்கப்பட உள்ளன.முன்னதாக, அபிராமி தியேட்டர் அருகே இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டமும், தொடர்ந்து சிடிசி டிப்போ அருகில் இருந்து ஊர்வலமாக மேட்டுப்பாளையம் சாலையில் சென்று பின் சிலைகள் பவானி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன.இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் கூறுகையில், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு, மூன்று டி.எஸ்.பி.,க்கள், பத்துக்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள், 25க்கும் மேற்பட்ட எஸ்.ஐ.,க்கள், சிறப்பு இலக்கு படை, ஆயுதப்படை, பேரிடர் மீட்பு குழு, கமாண்டோ குழுவினர், வெடிகுண்டு கண்டறிதல் மட்டும் அச்சுறுத்தல் குழுவினர், போலீசார் என மொத்தமாக மேட்டுப்பாளையத்தில் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், நேற்று முன் தினம் முதல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்கள், கரைக்கும் இடங்கள், ஊர்வல பாதைகளில், தீவிர ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.மேட்டுப்பாளையம் நகரில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் பாலப்பட்டி பவானி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது, என்றனர்.--படம் புட்நோட்:- மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் மோப்பநாயுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார்.படம் மெயிலில் உள்ளது சார்.---
06-Sep-2024