உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புகையிலை இல்லாத 64 கிராமங்கள்; இன்னும் 20 கிராமங்களுக்கு இலக்கு

புகையிலை இல்லாத 64 கிராமங்கள்; இன்னும் 20 கிராமங்களுக்கு இலக்கு

கோவை; 'கோவை மாவட்டத்தில், 64 கிராமங்கள், புகையிலை இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லுாரிகளில் தேர்வுகளை தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்படவுள்ளதால், ஏப்., -மே மாதங்களில் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக' மாவட்ட புகையிலை தடுப்பு திட்டத்தின் துணை இயக்குனர் சரண்யா தெரிவித்தார்.புகையிலை பயன்பாடுகளை கட்டுப்படுத்தும் விதமாக, மாவட்ட புகையிலை தடுப்பு திட்டத்தின் கீழ் சுகாதார துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆண்டு முழுவதும் பள்ளி, கல்லுாரிகளில் நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.மாவட்ட புகையிலை தடுப்பு திட்டத்தின் துணை இயக்குனர் சரண்யா கூறுகையில், ''ஏப்., -மே மாதங்களில் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். 84 கிராமங்களில் புகையிலை இல்லா கிராமங்களாக அறிவிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு; 64 புகையிலை இல்லா கிராமங்களாக அறிவித்துள்ளோம்.புகையிலை இல்லா கிராமமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில், கடைகளில் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறும். பஞ்சாயத்தில் தீர்மானங்கள் நடத்தப்படும், தொடர்ந்து விழிப்புணர்வு முகாம் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்களுடன் சேர்ந்து, ஏப்., மே மாதங்களில் கிராமங்களில் விழிப்புணர்வு செயல்பாடுகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி