உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழங்குடியினர் வீட்டினுள் சென்று உணவு சாப்பிடும் கரடி

பழங்குடியினர் வீட்டினுள் சென்று உணவு சாப்பிடும் கரடி

பாலக்காடு;பாலக்காடு அருகே, குடியிருப்பு பகுதிக்குள் கரடி புகுந்ததால், பழங்குடியின மக்கள் அச்சத்தில் உள்ளனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு அருகில் உள்ளது அட்டப்பாடி. வன எல்லை பகுதியான இங்குள்ள, புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட இடவாணி என்ற இடத்தில் பழங்குடியினர் குடியிருப்பு பகுதி உள்ளது.இங்கு, கடந்த ஒரு மாதமாக வனத்தில் இருந்து வந்த கரடி, மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வருகிறது. தினமும், மதியம் நேரம் குடியிருப்பு பகுதிக்கு வரும் கரடி, அங்குள்ள மரத்தில் முகாமிட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து சமையலறையில் அரிசி மற்றும் உணவுப் பொருட்களை சாப்பிட்டு செல்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், பலமுறை முயற்சித்தும் கரடியை காட்டிற்குள் விரட்ட முடியாமல் திணறுகின்றனர். கடந்த ஒரு வாரமாக வனத்துறையினர், கரடியை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், எந்தவித பலனும் இல்லை. இதனால், அப்பகுதி மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ