உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரியாணி சாப்பிடும் போட்டி; ஓட்டல் மீது  வழக்குப்பதிவு 

பிரியாணி சாப்பிடும் போட்டி; ஓட்டல் மீது  வழக்குப்பதிவு 

கோவை:பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, பிரியாணி சாப்பிடும் போட்டி நடத்திய ஓட்டல் மேலாளர் மீது போலீசார் பதிவு செய்தனர். கோவை லங்கா கார்னர் பகுதியில் 'போசே புட் எக்ஸ்பிரஸ்' என்ற ரயில் பெட்டி உணவகம் செயல்பட்டு வருகிறது. கடந்த, 28ம் தேதி உணவகம் சார்பில் பிரியாணி சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆறு பிரியாணி சாப்பிட்டால் ரூ. 1 லட்சம், ஐந்து பிரியாணி சாப்பிட்டால் ரூ. 50 ஆயிரம், மூன்று பிரியாணி சாப்பிட்டால் ரூ. 25 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அறிவிப்பை அடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கானோர் ஓட்டல் முன் திரண்டனர். இதையடுத்து அப்பகுதியில் அதிக அளவிலான வாகனங்கள் குவிந்தன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவ்வழியாக பயணித்த பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், அறிவிப்பின்றி கூட்டம் சேர்ந்தது, போக்குவரத்துக்கு இடையூறாக செயல்பட்டது உள்ளிட்டவைகளுக்காக, உணவக மேலாளர் கணேஷ் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !