உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொடிக்கம்பங்கள் அகற்ற ஏப்.21ல் முடிவு செய்யப்படும்

கொடிக்கம்பங்கள் அகற்ற ஏப்.21ல் முடிவு செய்யப்படும்

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள கொடிக்கம்பங்கள், அகற்றுவது குறித்து, ஏப்ரல் மாதம், 21ம் தேதி நடைபெறும் சர்வ கட்சி கூட்டத்தில், முடிவு எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. சென்னை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின் படி, கோவை மாவட்ட கலெக்டர் மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனருக்கு உத்தரவு அனுப்பியுள்ளார். அதில் நகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் அரசு நிலங்களில் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் வைத்துள்ள கொடிக்கம்பங்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சியினர், அதிகாரிகள் கொண்ட கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி கமிஷனர் அமுதா தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு சமூக அமைப்பினர் ஆகியோர் பங்கேற்றனர். வருகிற ஏப்ரல் 21ம் தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சிகள் கலந்தாய்வு கூட்டத்தில், கொடிக்கம்பங்களை அகற்றுவது குறித்து, முடிவெடுத்துக் கொள்ளலாம் என, அனைத்து கட்சிகள் பிரதிநிதிகள் ஒரு மனதாக உறுதி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை