கோவை;பாரிஸில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் அணியில் கோவையை சேர்ந்த வித்யா இடம் பிடித்துள்ளார்.விளையாட்டில் உட்சபட்ச திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டிகள், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும், 26ம் தேதி முதல் நடக்கிறது. இதில் இந்தியாவில் இருந்து, 117 வீரர் - வீராங்கனையினர் மொத்தம் 16 வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர். துப்பாக்கி சுடுதல், ஹாக்கி, டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து, மல்யுத்தம், வில்வித்தை, பாக்ஸிங், கோல்ப், டென்னிஸ், நீச்சல், பாய்மர படகு போட்டி, குதிரையேற்றம், ஜூடோ, துடுப்பு படகு, பளுதுாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கின்றது. இதில் தடகளத்தில் 18 வீரர்கள், 11 வீராங்கனையினர் என மொத்தம் 29 பேர் இந்திய அணி சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றன. அதிலும், தமிழகத்தில் இருந்து முதன் முறையாக 12 பேர் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர். கோவை வீராங்கனை: கோவை பாலத்துறை மீனாட்சி புரத்தை சேர்ந்த வித்யா, ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் பயின்று பள்ளி கல்வி முடித்தார். பின்னர் கொங்கு கல்லுாரியில் படித்தார். தடகளத்தில் மாநில, தேசிய, ஆசிய அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ள வித்யா ரயில்வேத்துறையில் பாணியாற்றி வருகினார். தேசிய அளவில் சிறந்த தடகள வீராங்கனையாக திகழும் இவர், கடந்தாண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில், பெண்களுக்கான 400மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலமும், கலப்பு 4*400மீ., தொடர் ஓட்டத்தில் வெள்ளியும் வென்றார். தற்போது பாரிஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில், மகளிருக்கான, 4*400மீ., தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.