உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை அள்ளும் அளவை நிர்ணயிக்க கோரிக்கை

குப்பை அள்ளும் அளவை நிர்ணயிக்க கோரிக்கை

கோவை, : துாய்மை பணியாளர்களுக்கு தினமும் குப்பை அள்ளும் அளவை நிர்ணயிக்குமாறு மாநகராட்சி கமிஷனரிடம் முறையிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்க பொதுச்செயலாளர் செல்வம், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனுக்கு அனுப்பியுள்ள மனுவில்,'மாநகராட்சி மத்திய மண்டலம், 68வது வார்டில் துாய்மை பணியாளர்களை வைத்து இரவு நேரத்தில் ஹோட்டல் கழிவுகளை சுத்தம் செய்கின்றனர். குப்பையை லாரிகளில் ஏற்றிவிடலாம். ஈரக்கழிவுகளை அப்படியே ஏற்ற முடியாது; சிரமமானது.ஐந்து பணியாளர்கள் ஒரு லாரியில் ஈரக்கழிவுகளையும், ரோட்டோர குப்பையையும் சேகரித்துவந்தனர். தற்போது, இரண்டு லாரியிலும், கூடுதலாக இரண்டு 'டாடா ஏஸ்' வாகனத்திலும் குப்பையை ஏற்ற கட்டாயப்படுத்துவது ஏற்புடையது அல்ல. எனவே, பணியாளருக்கு குப்பை அள்ளும் அளவை நிர்ணயித்து அமல்படுத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை