உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செக்போஸ்ட் பகுதியில் நிழற்கூரை அமைக்கணும்!

செக்போஸ்ட் பகுதியில் நிழற்கூரை அமைக்கணும்!

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, செக்போஸ்ட் பகுதியில் நிழற்கூரை அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அதிகப்படியான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த வழியாக வடசித்தூர், நெகமம் மற்றும் வடபுதூர், சொக்கனூர் செல்லும் கிராமப்புற ரோடும் உள்ளது.இதில், பழைய செக்போஸ்ட் பகுதியில் அதிக அளவு பஸ் பயணியர் மழை மற்றும் வெயில் காலங்களில் திறந்தவெளியில் நிற்க சிரமப்படுகின்றனர்.மேம்பாலத்தின் கீழ் பகுதியில், வாகன இயங்கும் நிலையில், ஆபத்தை பொருட்படுத்தாமல் மக்கள் அங்கு காத்திருக்கின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது.எனவே, பயணியர் நலன் கருதி சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் பயணியர் நிழற்கூரை அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை