உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டிப்பார்ப்பது போல்  ஓட்டிச்சென்ற திருடன்

ஓட்டிப்பார்ப்பது போல்  ஓட்டிச்சென்ற திருடன்

கோவை:பைக்கை 'டெஸ்ட் டிரைவ்' பார்ப்பது போல் திருடிச்சென்றவர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். சிங்காநல்லுார் காமராஜர் ரோட்டில், செகண்ட்ஹேண்ட் பைக் ஷோரூம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் பைக் வாங்குவதற்காக ஒருவர் வந்துள்ளார். அங்கிருந்த கே.டி.எம்., ஆர்.சி., 390 ரக பைக்கை பார்த்த அவர், பிடித்திருப்பதாக கூறியுள்ளார். ஓட்டி பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையடுத்து ஷோரூம் மேலாளர், பைக்கை கொடுத்து ஊழியர் ஒருவரையும் அவருடன் அனுப்பியுள்ளார். பைக்கை ஓட்டிச்சென்ற அந்த ஆசாமி, தனியாக ஓட்டிப்பார்க்க வேண்டும் என தெரிவித்து, ஷோரூம் ஊழியரை கீழே இறங்குமாறு தெரிவித்துள்ளார். ஊழியர் கீழே இறங்கியதும், பைக்குடன் எஸ்கேப் ஆகியுள்ளார். மேலாளர் சபரி, 34 அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ